Master Story
மாஸ்டர் படத்தின் கதை இது தான் சமூக வளையதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

Master Movie Story Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இன்று மாலை இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கல்லூரியில் பேராசியராக பணி புரிபவர் தளபதி விஜய். இவரின் குடிப்பழக்கத்தால் அந்த வேலையில் இருந்து சிறுவர் சீர்திருந்த பள்ளியில் ஆசிரியராக மாற்றப்படுகிறார்.

அங்கு மாணவர்களிடையே நடைபெறும் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் தெரிய வர அதை எப்படி தடுக்கிறார்? இதற்கு எப்படி தீர்வு காண்கிறார்? என்பது தான் இப்படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.

இதனை ஓரளவிற்கு உறுதி செய்யும் வகையில் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் போஸ்டரில் விஜய் கையில் மது பாட்டில் வைத்து கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.