Master Movie Leaked Issue

மாஸ்டர் பட காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட நபர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

Master Movie Leaked Issue : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இணையத்தில் லீக்காகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் தற்போது வெளிவந்த தகவலின் படி தனியார் டிஜிட்டல் ஊழியர் ஒருவரால் லீக் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நபர் மீது தயாரிப்பாளர் புகார் அளிப்பதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயவுசெய்து படத்தின் காட்சிகளை யாரும் ஷேர் செய்ய வேண்டாம். இது எங்களின் ஒன்றரை வருட உழைப்பு. ஒரு நாள் மட்டும் காத்திருந்து திரையரங்குகளில் படத்தை பாருங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது