Master Movie Latest Update

மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகி பத்து வாரம் ஆகிய நிலையிலும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Master Movie Latest Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களை மாஸ்டர் படம் படைத்த சாதனை கொண்டாட வைத்துள்ளது. அதாவது படம் ரிலீஸ் ஆகி பத்து வாரங்கள் ஆகியும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.