Master Next Update
மாஸ்டரின் அடுத்த அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், சாந்தனு, சேத்தன், மாளவிகா மோகனன், சஞ்சீவ், ஆண்ட்ரியா, ஆஹா கல்யாணம் பவி டீச்சர், விஜே ரம்யா, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதுவரை இப்படத்தில் இருந்து மூன்று போஸ்டர்கள் வெளியாகி மெகா மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் செம மாஸான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது அடுத்ததாக இந்த படத்தின் படடப்பிடிப்புகள் நெய்வேலி சுரங்க பாதையில் நடைபெற இருக்கிறதாம், இந்த இடத்தில் விஜயும் விஜய் சேதுபதியும் மோதிக் கொள்ளும் முக்கிய சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.