Master Movie Budget Details
Master Movie Budget Details

மாஸ்டர் பட்ஜெட்டில் மாஸ் காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Master Movie Budget Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் என பலர் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப் போய்க் கொண்டே வரும் இந்த வேளையில் படத்தின் பட்ஜெட் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தா? விஜய்யா? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? – டாப் 10 படங்களின் வசூல் நிலவரத்துடன் இதோ.!

பிகில் படம் ரூபாய் 180 கோடி பட்ஜெட்டில் வெளியாகி இருந்ததால் இந்தப் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தயாரிப்பு நிறுவனமும் லோகேஷ் கனகராஜை அணுகி பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்று கேட்டதற்கு ரூபாய் 30 கோடி முதல் 40 கோடி வரை இருந்தால் போதும் என கூறினார்.

இது விஜய் படமாச்சே பார்த்து பண்ணுங்க என தயாரிப்பு நிறுவனம் கூறியதற்கு எனக்கு என்ன தேவையோ அது போதும் எனக்கூறி சொன்னபடி சொல்லிய பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்துள்ளார்.

இதனால் விஜய் மகிழ்ச்சியாகி சன்மானமாக லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ரூபாய் 2 கோடி கொடுத்துள்ளார். மேலும் இப்படத்திற்காக லோகேஷ்க்கு ரூபாய் 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் படத்திற்காக ரூபாய் 80 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.