தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

தளபதி விஜய் நடிப்பில் 2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் தளபதி விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த மாஸ்டர் பட நடிகர்!…யார் தெரியுமா? வைரலாகும் பதிவு.

இப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களின் மத்தியிலும் பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ் திடீரென்று தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை வைத்துள்ளார். அதாவது ரசிகர் ஒருவர் அர்ஜுன் தாஸ் நேரில் பார்த்துள்ளார், ஆனால் அவருடன் பக்கத்தில் வந்து செல்பி எடுக்க தயங்கி தொலைவில் நின்று புகைப்படம் ஒன்றை எடுத்துவிட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த மாஸ்டர் பட நடிகர்!…யார் தெரியுமா? வைரலாகும் பதிவு.

அதற்கு பதில் அளித்துள்ள அர்ஜுந்தாஸ், “அடுத்த முறை நீங்கள் என்னை நேரில் பார்த்தால் தயங்காமல் என்னை அணுகுங்கள், நாம் நிச்சயமாக ஒன்றாக இணைந்து ஒரு புகைப்படம் எடுக்கலாம்” என்று ஒரு அன்பான வேண்டுகோளை வைத்திருக்கிறார். இந்த பதிவை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அர்ஜுன் தாசை மனதார பாராட்டி வருகின்றனர்.