Master Mahendran With New Car

மாஸ்டர் படத்தால் கிடைத்த அங்கீகாரத்தால் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார் மகேந்திரன்.

Master Mahendran With New Car : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அவர்களில் ஒருவர் தான் மகேந்திரன்.

இவர் தற்போது வாழ்க்கையில் முதல் முறையாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதையும் லோகேஷ் கனகராஜ் கையால் வாங்கியுள்ளார்.

இது குறித்து மகேந்திரன் கூறியதாவது, இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். ஆனால் மாஸ்டர் படம் தான் தனித்துவமான இடத்தை பெற்று தந்தது. இப்போதும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன என பேசினார்.

லோகேஷ் கனகராஜ் அண்ணா கையில் கார் வாங்காவது மகிழ்ச்சி, இனி என்னுடைய பயணம் தொடங்கும் என பேசினார்.