தனுஷ் 43 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Master Mahendran in Dhanush43 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக தனுஷ் 43 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

தமிழகம் முழுவதும், 23-ந்தேதி சசிகலா சுற்றுப்பயணம்..

தனுஷ்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

நல்லாதானே போயிட்டு இருக்கு.., எதுக்கு இந்த வேலை பாக்குற Vadivelu கலாய் பேச்சு..! | Press Meet | HD

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் மாஸ்டர் பட நடிகர் மகேந்திரன் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் 43 திரைப்படம் வெளியான பிறகு மகேந்திரன் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒரு நடிகராக இருப்பார் என படக்குழு தெரிவித்துள்ளது. ‌‌‌‌‌

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து இன்று பிரபல நடிகராக வலம் வருபவர் தான் மாஸ்டர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

‌‌‌‌