Master Mahendran About Ajith

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் அஜித் இளம் நடிகருக்கு ரசிகராக மாறியுள்ளார்.

Master Mahendran About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தல அஜித் குறித்த தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார் பிரபல இளம் நடிகர். அதாவது தல அஜித் மாஸ்டர் மகேந்திரனுக்கு ரசிகராம்.

பிக்பாஸ் வீட்டுக்குள்ள யாரை அனுப்பலாம்?? – மக்கள் கருத்து.!!(Opens in a new browser tab)

இது குறித்து மாஸ்டர் மகேந்திரன் பேட்டி ஒன்றில் முகவரி படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடிக்க வேண்டும் என என்னுடைய அப்பாவிற்கு போன் வந்தது. அப்பா என்னை அழைத்துச் செல்ல மறுநாள் கூட்டி வாங்க எனக் கூறினார்கள்.

ஒரு நாள் நானும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றேன். எனக்கு மதியம் தான் ஷூட். மூன்று மணிக்கு மேல் மேக்கப் போட துவங்கினார்கள். மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் போதே பின்புறத்திலிருந்து ஒரு கை என் மீது பட்டது. அது அஜித் சார் தான்.

ஆனால் அப்போது எனக்கு தெரியாது. என் அப்பா இவர் தான் ஹீரோ என அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அஜித் சார் என்னை பார்த்து நல்லா நடிக்கிறீங்க கும்பகோணத்தில் கோபால் படத்தை பார்த்ததில் இருந்து நான் உங்களுடைய ஃபேனாக ஆகிட்டேன் என கூறினார் என்று மாஸ்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.