Master
மாஸ்டர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் படத்தின் லுக்கில் இருந்து உருவாக்கப்பட்டது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 64-வது திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த போஸ்டரில் விஜய் தலையில் கை வைத்து கொண்டு வளையம் ஒன்றை சுற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார்.

இதே போல் தல அஜித் என்னை அறிந்தால் படத்தில் வளையத்தை சுழற்றுவது போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.

அந்த காட்சி தான் மாஸ்டர் போஸ்டருக்கு இன்ஸபிரேஷன் போல என நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.