Master Emoji in Twitter

மாஸ்டர் திரைப்படத்திற்கு ட்விட்டர் கொடுத்துள்ள கௌரவம் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Master Emoji in Twitter : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் தம்பியாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார்.

மேலும் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்த ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், தீனா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஜனவரி 13-ஆம் தேதியும் இந்தி மொழியில் ஜனவரி 14-ஆம் தேதியும் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்திற்கான தனி எமோஜி குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.