Master Create New Record
Master Create New Record

இந்திய அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது மாஸ்டர் திரைப்படம்.

Master Create New Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், வர்ஷா பொல்லம்மா, ரம்யா, தீனா என பலர் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

Master Release

இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி யூட்யூபில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றன.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்திய அளவில் அதிகம் லைக்குகளை பெற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக இடம் பிடித்துள்ளது.

இதுகுறித்த தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இதனை கொண்டாட தொடங்கியுள்ளனர்.