மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதியை சன் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.

Master Chef Telecast Date : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். உலக அளவில் பெயர் பெற்ற இந்த நிகழ்ச்சி முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. மூன்று நடுவர்கள் இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களை மதிப்பிட நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

சுதந்திர தின விழா : சென்னையில், ரூ.1.83 கோடியில் நினைவுத்தூண்..

இதுவரை மாஸ்டர் செஃப் பற்றிய தகவல்களும் புரோமோ வீடியோக்கள் மட்டும்தான் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி குறித்த ஒளிபரப்பி தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் டிவி.

மாஸ்டர் செப் நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதியை அறிவித்த சன் டிவி - மொத்தம் எவ்வளவு நாள் ஒளிபரப்பாகும் தெரியுமா??

வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு என 14 வாரங்கள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 15வது வரம் நிகழ்ச்சி கிராண்ட் பினாலே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சி டஃப் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde!