மாஸ்டர் படத்தின் வியாபாரம் பற்றிய முழு விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் வியாபாரங்கள் தற்போது முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்தின் வியாபாரம் ரூ 200 கோடியை தாண்டி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
படத்தின் வியாபாரமே ரூ 200 கோடியை தாண்டி இருப்பது கோலிவுட் சினிமாவையே மிரள வைத்துள்ளது.