இசையமைப்பாளர் அனிருத் மாஸ்டர் படத்தின் பிஜிஎம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Master BGM Video : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் என அனைத்து திரையுலக பிரபலங்களின் படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.

மேலும் இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

லாட் டவுன் அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிம்பிளாக நடந்து முடிந்தது.

மாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா?

படத்தில் இடம்பெற்றிருந்த வாத்தி ரைடு, குட்டி ஸ்டோரி, அவ கண்ண பார்த்தாக்கா ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்த நிலையில் தற்போது வாத்தி ரைடு பாடலின் BGM முதல் முறையாக கேட்டபோது அனுபவம் எப்படி இருந்தது என்பது குறித்த வீடியோ ஒன்று அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்ததாக அனிருத் விக்ரமும் அவரது மகன் த்ருவ்வும் இணைந்து நடிக்கவுள்ள சியான் 60 திரைப் படத்திற்கு இசை அமைக்க உள்ளார். இந்த படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் தயாரிக்கிறார், கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.