பிரேக் செய்ய முடியாத விஸ்வாசம் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது மாஸ்டர்.

Master Beats Viswasam Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக அஜித் நடிப்பில் நேர் கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

பிரேக் செய்ய முடியாத விஸ்வாசம் சாதனையை அடித்து நொறுக்கிய மாஸ்டர்.!!

விஸ்வாசம் பாடல் யூ டியூபில் 145 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்த சாதனையை வேறு எந்த பாடலாலும் முறியடிக்க முடியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடல் 146 மில்லியன் பார்வையாளர்களை பெற்று விஸ்வாசம் பாடல் சாதனையை முறியடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.