Master Audio Launch on Sun TV
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் சன் டிவி கத்தரி போட்டு விளையாடி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

Master Audio Launch on Sun TV  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ஆனால் 4 மணிக்கு தொடங்கிய இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் 6.30 மணியில் இருந்து தான் ஒளிபரப்பினார்கள்.

என் கூட நடிக்க ஓகேவானு கேட்ட விஜய்.. நாளே வார்த்தையில் ஆப் செய்த விஜய் சேதுபதி – அப்படி என்ன சொல்லியிருக்கார் பாருங்க

விஜய் பேசும் போது மக்களுக்காக தான் சட்டத்தை உருவாக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடைக்க கூடாது என பேசியது அப்போதே சமூக வளையதளங்களில் வைரலானது.

ஆனால் சன் டிவி விஜயின் அரசியல் சம்மந்தப்பட்ட பேச்சுகளை கத்தரி போட்டு தூக்கி போட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர்.

இதுக்கு தான் 2.30 மணி நேரம் கழிச்சு ஒளிபரப்பு பண்ணீங்களா? என தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.