IT ரைடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Master Audio Launch Expectation : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தின் வசூலால் விஜய் வீட்டிலும் தயாரிப்பு நிறுவனத்திலும் நேற்று முன்னாள் முதல் IT அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் விஜய் வீட்டில் இருந்து அவர்களால் எதையும் கைப்பற்ற முடியவில்லை. இந்த IT ரைடிற்கு எதிராக விஜய் ரசிகர்கள் குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேச போகிறார், இதற்கெல்லாம் என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பது தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பே..