தளபதி விஜயின் பைரவா மற்றும் மாஸ்டர் திரைப்படம் டிஆர்பியில் தெறிக்க விட்டுள்ளது.

Master and Bairavaa Record in TRP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பைரவா. அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

டிஆர்பி-யில் தெறிக்கவிட்ட தளபதி விஜயின் பைரவா மற்றும் மாஸ்டர் - எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா??

மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் விஜய் தி மாஸ்டர் என்ற பெயரில் வெளியானது. இந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய போது 6713000 இப்பிரச்சனை பெற்று கடந்த வாரத்தில் டாப்-5 லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் பைரவா திரைப்படம் ஒளிபரப்பானது 1.23 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.