Master Action Sequence

மாஸ்டர் படத்தில் சண்டைக் காட்சிகள் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளார் முக்கிய பிரபலம்.

Master Action Sequence Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த சீக்ரெட்டும் ரிலீஸ் – அதிர்ச்சியில் இயக்குனர்!

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ள ஸ்டண்ட் ஸ்டண்ட் சில்வா மொத்தம் 6 சண்டை காட்சிகள் இருப்பதாகவும் அனைத்துமே லாங் சீக்வன்ஸாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் மாஸ்டர் படத்தில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகி உள்ளது. தளபதி விஜய்க்கு இது ஒரு பக்கா ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.