Valimai Movie Trailer

வலிமை படத்தின் டிரெய்லரில் அஜித் செய்த மாற்றம் குறித்து தெரிய வந்துள்ளது.

Massive Changes in Valimai Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போனி கபூர் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை காரணமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி போயுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த அஜித் அதில் மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது டிரைலரில் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் மாஸான சேசிங் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இவை தான் படத்திற்கு முக்கியமான காட்சிகள். இதனால் இந்த காட்சிகளை ட்ரைலரில் வைத்து சஸ்பென்சை உடைக்க வேண்டாம் என அஜித் ‌‌ கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து டிரைலரில் மாற்றம் செய்யப்பட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.