Masala Milk Recipe
Masala Milk Recipe

தேவையான பொருட்கள் :

பாதாம் – 25 கிராம்,
முந்திரி- 25 கிராம்,
பிஸ்தா – 15 கிராம்,
ஏலக்காய் – 2,
பால் – ஒரு லிட்டர்,
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
சர்க்கரை – தேவைக்கேற்ப
நெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

1) பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பாதாம் 3, முந்திரி 3 ஆகியவற்றை துருவிக் கொள்ளவும்.

2) ஊற வைத்த பருப்புகளை கால் கப் பால் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3) அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் அரை கப் பால் ஊற்றி அடுப்பில் வைத்து கேசரி பவுடர் போட்டு நன்கு கிளறி விடவும்.

4) ஒரு கொதி வந்ததும் மீதியுள்ள பாலை ஊற்றி கிளறவும்.

5) வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் துருவிய முந்திரி, பாதாம் போட்டு வறுக்கவும்.

6) வறுத்தவற்றை எடுத்து பாலில் சேர்த்து கலக்கி மேலே ஏலக்காய் தூள் தூவி இறக்கவும்.

7) சுவையான எளிதில் செய்யக் கூடிய மசாலா பால் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here