Marukkal Neeka Natural Tips
Marukkal Neeka Natural Tips

Marukkal Neeka Natural Tips :

மருக்கள் உங்கள் அழகை கெடுக்கின்றதா? இதோ! மருக்கள் நீங்க இயற்கை வழிகள்..

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். அந்த மருக்களைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்.

1) பூண்டு பல்லை நன்றாக பேஸ்ட்டாக்கி மரு இருக்கும் பகுதிகளிலும், மருவின் மீதும் தடவி விடவும்.

2) அன்னாசிப்பழம் அல்லது அன்னாசி சாற்றினை மருவின் மீது தடவி வந்தால் கொட்டிவிடும்.

3) கற்பூர எண்ணையை தினமும் மருவின் மீது தடவி வர மரு நாளடைவில் கொட்டிவிடும். கற்பூர எண்ணை கிடைக்கவில்லை என்றால் கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் குழைத்தும் பூசலாம்.

4) உருளைக்கிழங்கினை மசித்து பசை போல் ஆக்கி தினமும் தடவி வர மரு கொட்டிவிடும்

5) சுண்ணாம்பை நன்றாக குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும்.

6) கற்றாழை ஜெல்லை மரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வேண்டும்.

7) வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here