Marudhanayagam Movie
மருதநாயகம் படம் மீண்டும் உருவாக இருப்பதாகவும் ஆனால் ஹீரோ கமல் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Marudhanayagam Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக இருந்த திரைப்படம் மருதநாயகம். அப்போதே இப்படத்தை முடிக்க ரூ 50 கோடி தேவைப்பட்டதால் படம் கைவிடப்பட்டது.

கமல்ஹாசனின் கனவு படமான இப்படம் தற்போது மீண்டும் உயிர் பெற உள்ளது. ஆனால் கமல்ஹாசன் நடிக்கவில்லை. அவரின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க சீயான் விக்ரம் நடிக்க உள்ளாராம்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Marudhanayagam

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.