Marriage Matching : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம்

Marriage Matching :

* பொருத்தம் பார்த்து திருமணம் செய்தும் சில மாதங்களில் ஒருவர் இறந்து போவதை சில இடங்களில் பார்க்கிறோம். இதனால் பலரும் ஜோதிடத்தை வெறுக்கின்றனர்.

* சிறந்த ஜோதிடரை அணுகி சரியான நேரத்தில் கணிக்கப்பட்ட ஜாதகம் ஆக இருந்து இந்நிலையில் அதற்கு பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால் நிச்சயம் யாருக்கும் எந்த பாதிப்பும் வாய்ப்பது மிகவும் குறைவுதான்.

காரணங்கள்:

1) திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண், பெண் என இந்த இருவரது ஜாதகத்தையும் கூர்ந்து ஆராயாமல் வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் பார்த்து திருமணம் செய்வது மிகவும் தவறு. அதனால் நட்சத்திர பொருத்தத்தையும் பார்க்கவேண்டும் உடன் இருவரது ஜாதகத்தையும் எடுத்து நன்கு ஆராய வேண்டும்.

நோட்டா இயக்குனருக்கு திருமணம் முடிந்தது, கல்யாண பெண் இவர் தான் – வைரலாகும் புகைப்படம்.!

2) 10 பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தம் மிகவும் முக்கியம். திருமணம் செய்துகொள்ள இருக்கும் தம்பதிகளின் ஆயுளை நிர்ணயிக்கும் பொருத்தம் இது.

ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன, மற்ற ஏழு பொருத்தங்கள் உள்ளது. அதனால் திருமணம் செய்யலாம் என்று கூறிவிடுவார்கள். இது மிகவும் தவறு. ரஜ்ஜிப்பொருத்தம் மிக மிக முக்கியமான ஒன்று.

3) ஜாதகத்திற்கு நேரம் மிகவும் முக்கியம். சிலருக்கு பிறந்த தேதி தெரியும். ஆனால் நேரம் தெரியாத இந்நிலையில் நேரத்தை குத்துமதிப்பாக கொடுத்து ஜாதகம் கணிப்பது இன்றைய காலகட்டத்தில் பார்க்க முடிகிறது. இதனால் ஒட்டுமொத்த ஜாதக பலனே மாறிவிடுகிறது.

இப்படி பலவகையான காரணங்களால் தான் மேற்கண்ட தவறு நடைபெறுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here