Aarav
ஆரவ்வுடன் இணைந்து நடித்தது பற்றி தன்னுடைய அனுபவத்தை ஷேர் செய்துள்ளார் நாயகியாக நடித்துள்ள நிகேஷா படேல்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஆரவ். இவர் தற்போது இயக்குனர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா MBBS என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஆரவ்விற்கு ஜோடியாக நிகேஷா படேல் நடிக்க ராதிகா சரத்குமார் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தில் ஆரவ்வுடன் இணைந்து நடித்தது குறித்து தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார் நிகேஷா படேல்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிரபல நடிகர்களுடன் 30-க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டேன், ஆனால் ஆரவ் போன்ற புது முகத்துடன் பணிபுரிவது இதுவே முதல் முறை.

இது ஒரு வித்தியாசமான அனுபவம்.. இது போன்ற திறமையான நடிகர்களுடன் மீண்டும் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்.

நன் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த படத்தை பார்க்கவில்லை. படம் வெற்றியடைய வாழ்த்துக்களும் என கூறியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.