Mari Selvaraj and Dhruv Movie Update

துருவ் விக்ரம் படத்தை ஓரம் கட்டியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

Mari Selvaraj and Dhruv Movie Update : தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கி பிரபலமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தினை இயக்கினார்.

மேலும் இவர் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார். இந்த படத்தினை பா ரஞ்சித் தயாரிக்க இருந்தார். ரஞ்சித் தயாரிப்பில் பல படங்கள் உருவாக உள்ள காரணமாக உடனடியாக இந்த படத்தினை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தனுஷ் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டதன் காரணமாக அவரை வைத்து படத்தினை இயக்கி முடித்து விட்டு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தினை இயக்குவார் என கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.