
MeToo Vairamuthu : வைரமுத்து ஆம்பளை தானே அவர் பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறு இல்லையே என பிரபல நடிகரான மாரி முத்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீ டூ விவகாரம் தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்து வருகிறது. பல நடிகைகள், பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி கூறி வருகின்றனர்.
இந்த மீ டூ சர்ச்சையில் பெரிதும் சிக்கி இருந்தவர் வைரமுத்து. பாடகி சின்மயி உட்பட பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை கூறி வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் மாரி முத்து என்பவர் வைரமுத்து ஆம்பளை அவர் பெண்களை படுக்கைக்கு அழைக்க தான் செய்வார்.
விருப்பம் இருந்தால் படுக்கைக்கு செல்லுங்கள். இல்லையென்றால் முடியாது என கூறி விடுங்கள் என கூறியுள்ளார். மேலும் ஆம்பளை பெண்ணை அழைத்தால் தவறில்லை. ஆண்களை அழைத்தால் தான் அசிங்கம் என கூறியுள்ளார்.
மாரி முத்துவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பலரும் மாரி முத்துவுக்கு எதிராக கண்டனங்களை கூறி வருகின்றனர்.
மாரி முத்து என்பவர் கார்த்தியின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி இருந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் இரண்டாவது அக்காவின் கணவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.