March 7 Release

March 8 Release : நாளை மொத்தம் 5 படங்கள் மோதி கொள்ள உள்ளன. அவை என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது வெளியாகி விடும். சில சமயங்களில் இதன் எண்ணிக்கையும் அதிகமாகும்.

அப்படி இந்த வாரமும் மொத்தம் 5 படங்கள் ரிலீசாக உள்ளன. இவைகளின் எந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும். வசூலை குவியும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

நாளை ரிலீசாகும் படங்களின் லிஸ்ட்

1. பூமராங்
2. பொட்டு
3. ஸ்பாட்
4. கபிலவஸ்து
5. சத்ரு

இதில் அதர்வாவின் பூமராங் திரைப்படம் நதி நீர் இணைப்பு குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளது. இதனால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அதே போல் கதிர் நடித்துள்ள சத்ரு திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பரத் நடிப்பில் உருவாகியுள்ள பொட்டு திரைப்படமாவது அவருக்கு கம் பேக் கொடுக்குமா? என்பதையெல்லாம் நாளை வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.