Petta Single Track

Petta Marana Mass Song : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட பர்ஸ்ட் சிங்கிள் டிராக் தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் காலா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

படையப்பா, பாஷா பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பாபி சிம்ஹா, ஷனந்த் ஷெட்டி, நவாஸுதீன் சித்திக் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் பாடலான மரண மாஸ் பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதன் படி தற்போது மரண மாஸ் சிங்கிள் டிராக் வெளியாகி அடி தூள் கிளப்பி வருகிறது.

பேட்ட படத்தின் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அநிருத்திக் முதல் முறையாக இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ உங்களுக்காக

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.