Marana Mass Poster : நேற்று வெளியான பேட்ட போஸ்டரால் படக்குழுவினரையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மேலும் நாளை இப்படத்தின் மரண மாஸ் என்ற சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது. இதற்கான போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று ட்விட்டரில் வெளியிட்டு இருந்தது.

போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யங் லுக்கில் செம கெத்தாக மாஸாக உள்ளார் என்பது ரசிகர்கள் கொண்டாட்டம். இருந்தாலும் படக்குழுவினரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

காரணம் மாஸாக இருக்கும் இந்த போஸ்டரில் ரஜினியின் கீழ்ப்பக்க கையில் எடிட்டிங் சரியில்லை என்பது தான். இதனால் ரசிகர்கள் இதையெல்லாம் கவனித்து ஒழுங்காக எடிட் செய்து இருக்கலாமே என திட்டி வருகின்றனர்.

இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்க :

Marana Mass

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.