Maraimalai Nagar Karthikeya Thanks to CM
Maraimalai Nagar Karthikeya Thanks to CM

Maraimalai Nagar Karthikeya Thanks to CM : இளைஞர்களின் கவரும் முதல்வரின் திட்டத்தின் மூலம் தன்னுடைய கனவு நினைவானதும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயா என்பவர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்கு தமிழகத்தை கொண்டு வரவும் கொரானாவால் பொருளாதாரம் சரிவை சந்திக்காமல் இருக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வந்த மொத்தத் தொகை எவ்வளவு? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

இந்த வகையில் சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த கார்த்திகேயா என்ற இளைஞன் சிட்கோ நிறுவனத்தில் கொரானா Productive Kit தயாரிப்பிற்கான மாடலை சமர்ப்பித்துள்ளார்.

இதனையடுத்து இவர் தொழில் தொடங்குவதற்காக 30% மானியத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும் இவர் தயாரிக்கும் பொருட்களில் 50 சதவீதத்தை தமிழக அரசே வாங்கிக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது தான் ஒரு நிறுவனத்தின் முதலாளியாகி இருப்பதால் அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.