ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மன்சூர் அலிகான் ராஜூவை பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்டு திக்கு முக்காட வைத்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்த மன்சூர் அலிகான் ராஜுவை தனது கேள்விகளால் திக்கு முக்காட வைத்திருக்கிறார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜு அந்நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளி திரையில் ஒரு ரவுண்டு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் மீண்டும் சின்னத்திரையிலேயே ஆங்கர் ஆக பணி செய்து கொண்டு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினார்.

மன்சூர் அலிகான் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த ராஜு!!… முழு விவரம் இதோ!.

ஆனால் அதே கேள்வியை சிறப்பு விருந்தினராக ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் என்ட்ரி கொடுத்த உடனே ராஜூவை பார்த்து “நீ என்ன இங்க பண்ற, உனக்கு எவ்ளோ பெரிய டைட்டில் கிடைச்சு இருக்கு, அதை யூஸ் பண்ணி படம் பண்ணாம இங்க என்ன பண்ற” என ஆரம்பித்தார். வழக்கமாக டைம்மிங் காமெடி, நக்கல், நையாண்டி என ராஜூ அனைவரிடமும் புகுந்து விளையாடுவார். ஆனால் இந்த முறை மன்சூர் அலிகான் முன்பு அமைதியாகவே இருந்து வந்தார். ஏனெனில் அவரிடம் ராஜு எதை சொல்ல வந்தாலும் பிக் பாஸ் டைட்டில் வாங்கிட்டு, அதுவும் கமல் சார் கையால வாங்கிட்டு இங்க என்ன பண்ற?” என்ற கேள்வியையே மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டிருந்தார்.

மன்சூர் அலிகான் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த ராஜு!!… முழு விவரம் இதோ!.

மேலும் அவர் ராஜுவை பார்த்து “நல்ல உயரம், பெரிய கண்ணு, பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனா சோறு கிடைக்கும் இடம் சொர்க்கம் அப்படின்னு இங்கே இருக்கீயா? அமிதாப்பச்சன் மாறி இருக்க, போய் படம் பண்ணுப்பா” என ராஜூவை டைம் கிடைக்கும் போதெல்லாம் மன்சூர் அலிகான் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அவரது இந்த கேள்விக்கு ராஜுவால் கடைசி வரை பதில் சொல்லவே முடியவில்லை.