தளபதி 67 படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் இந்த படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து மன்சூர் அலிகான் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் கிடைக்க உள்ளது. லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக என்னுடைய ஒரு படத்தின் மன்சூர் அலிகான் இருப்பார் என சொல்லியது காரணத்தினால் அவர் இந்த படத்தில் நடிக்க போகிறார் என சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.