YouTube video

Mansoor Ali Khan Blast Speech Against OTT Release and TASMAC

Bharathi Raja Support to Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள இந்தப் படத்தை படக்குழு தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டுமென இவ்வளவு நாள் காத்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத காரணத்தினால் இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அஜித்தின் “ ராஜா” பட நாயகி தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி!!

இந்த அறிவிப்பு திரையுலகில் வினியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சூர்யாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் OTT வழியாக படங்களை வெளியிடுவதில் தவறில்லை என கூறியுள்ளார்.

மேலும் தியேட்டரில் டிக்கெட்டின் விலை அதிகமாக இருப்பதாகவும் டிக்கெட் விலையை விட பாப்கார்ன் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் ஒரு சாமான்ய மனிதன் எப்படி தியேட்டருக்கு வருவான் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த முறையை கொண்டு வரக்கூடாது, என பல பிரச்சனைகளுக்கு போராடி பின்னர் அவை பின்வாசல் வழியாக நாம் வரவேற்று கொண்டுதான் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் திரையுலகில் சம்பாதிக்கும் பணத்தை திரையுலகிலேயே முதலீடு செய்பவர்கள் வெகு சிலரே அதில் சூர்யாவும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

மேலும் சூர்யாவும் கார்த்தியும் நம்ம வீட்டு பிள்ளைகள். தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள வாருங்கள் இந்த பிரச்சனையை பேசித் தீர்ப்போம், ஒற்றுமையுடன் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.