சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைந்துள்ளார் பீஸ்ட் பட பிரபலம் ஒருவர்.

Manoj Paramahamsa in SK20 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியானதாக திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக டான் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதை இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன.

மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் சிங்கம் பாதை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் என்பவர் இயக்கி வருகிறார்.

#rithika crying 😭 because of #vanibhojan

16 வகை லட்சுமிகளும், வழிபாட்டுப் பலன்களும்.!

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கில் அனுதீப் என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எஸ் கே 20 என தற்காலிகமாக இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு தமன் கம்போஸ் செய்யும் வேலைகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தில் பணியாற்றி வரும் மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.