நடிகர் மனோபாலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மனோபாலா. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வரும் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் நிலையில் மனோபாலாவை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மனோபாலா சிகிச்சை பெற்றதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் பூச்சி முருகன் அவர்களிடம் உற்சாகமாக உரையாடியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிகிச்சை முடிந்து மனோபாலா இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.