Mannurunda Song Record
Mannurunda Song Record

சூரரைப் போற்று படத்தில் பாடல் புதிய சாதனை படைத்திருப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mannurunda Song Record : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

வெறும் ரூபாய் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் வியாபாரம் 100 கோடி அளவில் நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

சூரரை போற்று பாட்டுக்கு போட்டியாக இறங்கிய மாஸ்டர் அப்டேட்.. என்ன ஆட்டத்துக்கு தயாரா? – அதிகாரபூர்வ அறிவிப்புடன் இதோ

இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் படத்தில் இடம்பெறும் மண்ணுருண்ட பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்