Mannadu 1st Single Release Update

சொன்ன தேதியில் மாநாடு படத்தின் பாடல் வெளியாகாது என மாநாடு தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Mannadu 1st Single Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரம்ஜான் விருந்தாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த பாடல் சொன்னபடி ரம்ஜான் அன்று வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட்பிரபு தாயார் காலமானதால் படக்குழு இப்படியான முடிவை எடுத்திருப்பதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். மேலும் வேறு ஒரு தேதியில் இந்த பாடல் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.