Mankatha Interval Scene
Mankatha Interval Scene

மங்காத்தா இன்டர்வெல் சீன் ஷூட்டிங்கில் நடந்த சுவாரசியத்தை பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு.

Mankatha Interval Scene : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஃபீலிங் மச்சி.. பலரையும் கவர்ந்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ரசிகர்கள் அனைவரும் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெங்கட் பிரபுவும் அஜித் ஓகே சொன்னால் அடுத்த கணமே நானும் ரெடி என கூறி வருகிறார்.

நேற்று கே டிவியில் மங்காத்தா படம் ஒளிபரப்பானது ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு மங்காத்தா இன்டர்வெல் காட்சி ஷூட்டிங்கின்போது அஜித் பிரியாணி சமைத்து கொடுத்ததாக தான் பதிவிட்ட இருந்த டிவிட்டை மீண்டும் ஒருமுறை ஷேர் செய்துள்ளார்.