Mankatha 2 : அஜித்துடன் இன்னொரு படம் உண்டு என வெங்கட் பிரபு அறிவித்துள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் தல அஜித்தை வைத்து இயக்கி இருந்த மங்காத்தா அஜித்தை மற்றொரு சாயலில் ரசிக்க வைத்தது.
இதனால் இந்த கூட்டணி மீண்டும் உருவாகாதா என ரசிகர்கள் அனைவருமே ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு நிகழ்ச்சி ஒன்றில் நிச்சயம் அஜித்துடன் இன்னொரு படம் இருக்கு. ஆனால் அது மங்காத்தா 2 தானா? என்பது தெரியாது. நிச்சயம் மீண்டும் இணைவோம் என கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இவ்வாறு பேசிய வீடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
Exclusive : தல அஜித் சார் கூட கூடிய சீக்கிரமே ஒரு படம் இருக்கு! அது மங்காத்தா-2 வா இல்லையானு தெரியல ! – இயக்குநர் வெங்கட் பிரபு #Thala #Ajith #Viswasam @vp_offl #Mankatha #Mankatha2 pic.twitter.com/DHM9Vxnrz5
— Aᴊɪᴛʜ Jᴀᴡᴀʜᴀʀツ (@AjithJawahar) February 17, 2019