
Mankatha 2 : வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 படம் எப்போது என கேட்ட பிரபலத்திற்கு வெங்கட் பிரபு அளித்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டாகி இருந்த படம் மங்காத்தா.
அஜித்தின் நடிப்பை முற்றிலும் மாற்றிய படம் மங்காத்தா என்றால் அது மிகையாகாது. இதனால் ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏன் இந்த ஆர்வம் திரையுலக பிரபலங்களுக்கே உள்ளது. தற்போது அப்படி தான் வெங்கட் பிரபுவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு மங்காத்தா 2 எப்போது என எடிட்டர் பிரவீன் கே.எல் கேட்டுள்ளார்.
இதற்கு நிச்சயம் மாஸான பதிலாக வெங்கட் பிரபு கூறுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க வெங்கட் பிரபுவோ பிறந்த நாலா வாழ்த்திற்காக நன்றி மட்டும் கூறியுள்ளார்.
இதனால் மங்காத்தா 2 எடுக்கும் முயற்சியை கை விட்டு விட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Thank q saar
— venkat prabhu (@vp_offl) November 7, 2018