Mankatha 2
Mankatha 2

Mankatha 2 : வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா.

அஜித் கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் அஜித் ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

பேட்மிண்டன் ஆட வந்த அஜித்தின் எளிமையால் பிரமித்த ஊழியர்கள் – வைரலாகும் வீடியோ!

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்காக பல ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் காத்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் தல அஜித்தை வெங்கட்பிரபு ஹைதராபாத் சென்று கண்டு வந்ததால் இந்த கூட்டணி இணைவது உறுதி என்பது போல பேசப்பட்டது.

 இதுகுறித்து அண்மையில் பேசிய நடிகர் அர்ஜுன் அவர் பங்கிற்கு ஒரு சுவாரஸ்யத் தகவலை சொன்னார்.

அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அவர் கூறியதாவது, “மங்காத்தா ஹிட்டான சமயத்திலேயே அஜித் என்னிடம் மங்காத்தா 2-விற்கான ஒன் லைனை சொன்னார்.

அவரிடம் மங்காத்தா 2-விற்கான கதை உள்ளது. ஆனால் அதில் நான் இருக்கிறேனா என்பதை இயக்குநர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.