
Mankatha 2 Update : அஜித், விஜய் கூட்டணியில் மங்காத்தா 2 எப்போது என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித்தும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களும் இணைந்து நடித்திருந்த படம் மங்காத்தா.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டில் வெளியாகி மெகா மாஸ் வரவேற்புடன் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்தது.
இந்த படத்தில் அஜித் வில்லன் வேடத்திலும் நடித்து மிரட்டி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் வெங்கட் பிரபுவுடன் மங்காத்தா 2 எப்போது என கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் அஜித், விஜய் என இருவரையும் வைத்து மங்காத்தா 2 படம் இயக்குவீர்களா? எப்போது இது நடக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு வெங்கட் பிரபு இருவரும் இணைந்து நடிக்க 7 அல்லது 8 வருடங்களுக்கு முன்பு ஒப்பு கொண்டார்கள். ஆனால் இப்போது ஒப்பு கொள்வார்களா? என தெரியவில்லை என பதிலளித்துள்ளார்.
அஜித், விஜய் ஆகியோர் இணைந்து மங்காத்தா 2-வில் நடிக்க வேண்டும் என மங்காத்தா படம் வெளியான போதிலுருந்தே ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hehehehe ippo avanga othukanum!! 7/8 years back they agreed!! Ippo?!?
— venkat prabhu (@vp_offl) November 12, 2018