இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்குவதாக மஞ்சுமெல் பாய்ஸ் முடிவெடுத்துள்ளனர்.
சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்த படங்களில் ஒன்று மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இசைஞானி இளையராஜா இசையமைத்த கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல்.
இந்தப் பாடலை இளையராஜாவின் அனுமதியின்றி படக்குழு பயன்படுத்தியதால் நஷ்ட ஈடாக 2 கோடி கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
பிறகு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 60 லட்சத்திற்கு ஒப்புக்கொண்டு சட்ட சிக்கலை முடித்து வைத்துள்ளனர் படக்குழு.
இந்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.