துணிவு திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்து மீம்ஸ் போட்டு கலாய்த்த ரசிகர்களுக்கு நடிகை மஞ்சு வாரியரின் விளக்கம் வைரல்.

தல அஜித் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பு ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

மீம்ஸ் போட்டு கலாய்த்த ரசிகர்கள்!!… விளக்கம் அளித்த நடிகை மஞ்சுவாரியரின் பதிவு வைரல்.!

அண்மையில் இப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான சில்லாசில்லா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நேற்றைய தினம் இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான காசேதான் கடவுளடா பாடல் வெளியானது. இப்பாடலை வைசாக் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து பாடியுள்ளனர். ஆனால் இப்பாடலில் நடிகை மஞ்சு வாரியரின் குரல் இடம்பெறாததால் மஞ்சு வாரியர் எங்கு பாடியிருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு ஒரே ரசிகர்கள் மீம்ஸ் மூலம் கேலி செய்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

மீம்ஸ் போட்டு கலாய்த்த ரசிகர்கள்!!… விளக்கம் அளித்த நடிகை மஞ்சுவாரியரின் பதிவு வைரல்.!

இதற்கு நடிகை மஞ்சு வாரியர் தனது twitter பக்கத்தில் அளித்துள்ள விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “காசேதான் கடவுளடா பாடலில் என் குரல் கேட்கவில்லை என கூறுபவர்கள் கவலைப்பட வேண்டாம். பாடலின் வீடியோ வெர்ஷனுக்கான எனது குரல் ரெக்கார்டு செய்யப்பட்டு உள்ளது. உங்கள் அக்கறைக்கு நன்றி. இதற்கிடையில் வேடிக்கையான ட்ரோல்களை நான் ரசித்தேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.