Manju Warrier Musical Video
Manju Warrier Musical Video

மஞ்சுவாரியர் இல் திறமையை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

Manju Warrier Musical Video : மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். திறமையான நடிகை எனப் பெயர் எடுத்த இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

நோ பாட்டு, நோ டான்ஸ்.. தளபதி மட்டும் போதும் விஜயை இயக்குவது குறித்து லோகேஷ் கனகராஜ் அதிரடி பேட்டி!

கொஞ்சம் முதுமையான தோற்றத்தில் நடித்து இருந்தாலும் தன்னுடைய அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இருந்தார் மஞ்சு வாரியர்.

இவர் இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியது.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீட்டில் இருப்பதால் மஞ்சு வாரியரும் வீட்டில் இருக்கிறார்.

வாத்தி கம்மிங் பாட்டுக்கு மாஸ்டர் இயக்குனரின் மகள் ஆடிய க்யூட்டான ஆட்டம் – வைரலாகும் மரண மாஸ் வீடியோ!

அவர் அழகாக வீணை வாசிக்கும் வீடியோ ஒன்றை தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்குள் இப்படி திறமை இருக்கிறதா என வியப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதனைப் பார்த்த நடன மாஸ்டர் பிருந்தா அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மஞ்சு வாரியரின் இசைக்கு விஜய் நடனம் ஆடுவது போல ஜிப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் ரசிகர்.

இன்னொரு ரசிகர் multi-talented பியூட்டி என கமெண்ட் கொடுத்துள்ளார்.

தனுஷ் ரசிகர் ஒருவர் மிகச்சிறப்பான வாசித்தல் பச்சையம்மா என அசுரன் கதாபாத்திரப் பெயரை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டவரான நடிகர் திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர் தான் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகர் திலீப் தற்போது காவியா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.