manju warrier

விஜய் சேதுபதி நடித்த 96 பட வாய்ப்பை தவற விட்டுவிட்டதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளேன்.

மலையாளத்தில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். அதன்பின் அவரிடமிருந்து விவாகரது பெற்றார். அதன்பின், நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Happy Birthday Trisha
Happy Birthday Trisha

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் அப்படத்தின் இயக்குனர் முதலில் என்னைத்தான் நடிக்க வைக்க விரும்பியிருக்கிறார். ஆனால், என்னை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்பதால் திரிஷாவை நடிக்க வைத்துள்ளனர். என்னிடம் கேட்டிருந்தால் நிச்சயம் அப்படத்தில் நடித்திருப்பேன்.

ஆனாலும், ஜானு கதாபாத்திரத்தில் திரிஷா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாதபடி அவர் நடித்திருந்தார் என மஞ்சுவாரியர் கூறியிருந்தார்.