அஜித்துடன் அசத்தலான பைக் ரைடு போன புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற வலிமை படத்தை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்துடன் அசத்தலான பைக் ரைடு... போட்டோக்களை வெளியிட்ட மஞ்சு வாரியர் - குவியும் லைக்ஸ்

போனி கபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைக்க இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித் ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். மஞ்சு வாரியர் அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அஜித்துடன் அசத்தலான பைக் ரைடு... போட்டோக்களை வெளியிட்ட மஞ்சு வாரியர் - குவியும் லைக்ஸ்

அந்த வகையில் தற்போது அஜித்துடன் சேர்ந்து பைக் ரைடு போன போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.

அஜித்துடன் அசத்தலான பைக் ரைடு... போட்டோக்களை வெளியிட்ட மஞ்சு வாரியர் - குவியும் லைக்ஸ்

அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இருப்பை வேடங்களில் நடித்து வரும் இந்த படம் பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.