பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் குந்தவை கதாபாத்திரத்தை பற்றி விமர்சனம் தெரிவித்தவர்களுக்கு இயக்குனர் மணிரத்தினம் பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி, சரத்குமார், ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

குந்தவை பற்றின விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மணிரத்தினம்!!!… வெளியான வீடியோ இதோ!.

பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகி இருப்பதால் படம் பற்றிய கதை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் கூட்ட கூட்டமாக பார்த்து வருகின்றனர். தற்போது வரை 230 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை தெரிவிக்க விட்டு வரும் இப்படத்தை பலரும் பாராட்டி வந்தாலும் ஒரு சிலர் சில விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

குந்தவை பற்றின விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மணிரத்தினம்!!!… வெளியான வீடியோ இதோ!.

இந்நிலையில் சமீபத்தில் எடுத்த பேட்டியில் இயக்குனர் மணிரத்தினம் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் குறித்து வந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “இந்தக் கதையில் குந்தவை புத்திசாலி, அதற்காக அவரைப் பற்றி முழுவதும் சொல்வது கடினம் இது ஒரு திரைகதை படத்தில் ஒரு கதையை கொண்டு வர வேண்டும் என்றால் அந்த கேரக்டர் ஏதாவது செய்ய வேண்டும்” அப்படித்தான் இதில் த்ரிஷாவை பயன்படுத்தியுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.